வெளிநாட்டு சுற்றுலா பயணியை வைத்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கப்பட்ட குற்றாலம் படகு போக்குவரத்து.

by Editor / 10-07-2023 10:57:03pm
வெளிநாட்டு சுற்றுலா பயணியை வைத்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கப்பட்ட குற்றாலம் படகு போக்குவரத்து. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை குற்றால சீசன் கலை கட்டுவது வழக்கம். அந்த வகையில், சற்று காலதாமதமாக ஜூலை மாதத்தில் இருந்து சீசன் களைகட்டிய நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்து அருவிகளில் ஆனந்த குளியல் இட்டு வருகின்றனர். இந்த நிலையில், சீசன் காலகட்டங்களில் வழக்கமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், படகு போக்குவரத்து, சாரல் திருவிழா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்விப்பது வழக்கம். அந்த வகையில், இந்த வருடத்திற்கான படகு போக்குவரத்தானது, இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த படகு போக்குவரத்து தொடக்கவிழாவில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M. குமார் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கலந்து கொண்ட நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் படகு போக்குவரத்து தொடக்க விழாவில் கலந்து கொண்ட நிலையில், மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளிநாட்டு பெண்ணை வைத்து ரிப்பன் வெட்டி படகு போக்குவரத்தானது தொடங்கப்பட்டது.  தற்போது, இந்த படகு குழாமில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்தபடி மகிழ்ந்து வரும் சூழலில், படகில் பயணம் செய்வதற்காக தமிழக சுற்றுலாத்துறை மூலம் கீழ்க்கண்டவாறு கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில், சுமார் 30 நிமிடம் படகில் பயணம் செய்ய இரு நபர் மிதி படகிற்கு ரூ.150 கட்டணமாகவும், நான்கு நபர் மிதி படகிற்கு ரூ.200 கட்டணமாகவும், 4 நபர் துடுப்பு படகிற்கு ரூ. 250 கட்டணமாகவும், தனி நபர் படகிற்கு ரூ.150 கட்டணமாகவும் வசூல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு சுற்றுலா பயணியை வைத்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கப்பட்ட குற்றாலம் படகு போக்குவரத்து.
 

Tags :

Share via