மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தையை காண அன்புமணி வருகை.

by Staff / 06-10-2025 09:36:30am
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தையை காண அன்புமணி வருகை.

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று (அக்05) இரவு ஏற்பட்ட திடீர் உடல் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். இதய பரிசோதனைகள் செய்வதற்காக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, பாமகவினர் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை சந்தித்து நலம் விசாரிக்க அவரது மகன் அன்புமணி சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார்.

 

Tags : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தையை காண அன்புமணி வருகை

Share via