சிசிடிவி ஆதாரத்துடன் திருடனை தேடி வரும் காவல்துறை.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் ஒருவன் அங்குள்ள ஐந்து கடைகளில் பூட்டுகளை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது தகவல் அறிந்த குன்னூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் மேலும் சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சியை வைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர் மேலும் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதியில் உள்ள கேடுகள் பூட்டப்படாதாலும் மார்க்கெட் காவலாளிகள் இல்லாததாலும் இதுபோல் திருட்டு முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட வாய்ப்புள்ளதால் நகராட்சி நிர்வாகம் காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்பது மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.
Tags : நள்ளிரவில் ஐந்து கடைகளை உடைத்த மர்ம நபர் சிசிடிவி ஆதாரத்துடன் திருடனை தேடி வரும் காவல்துறை.....