டியூட்- திரை விமர்சனம்
இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில்தீபாவளியை முன்னிட்டு வெளியான 'டியூட்' திரைப்படம்.பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான காதல் மற்றும் அதிரடிகலந்த நகைச்சுவைப் படமாகும். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
அகன் என்ற இளைஞன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். ஆனால் அந்தப் பெண், அகனின் காதலை நிராகரித்துவிடுகிறார். சில காலத்திற்குப் பிறகு அகனின் மனமாற்றத்தை உணரும் அப்பெண், அவரிடம் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால், இப்போது அகன் அவளது காதலை ஏற்க மறுக்கிறார். இதற்குப் பிறகு நடக்கும் திருப்பங்கள், இந்தப் படத்தின் திரைக்கதை. காதல், நகைச்சுவை, அதிரடி எனப் பல அம்சங்களை ஒரு புதுமையான கண்ணோட்டத்தில் அணுகியிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலுவான கதாபாத்திரத்தில் வந்துள்ள சரத்குமாரின் அனுபவ நடிப்பு படத்திற்குப் பெரிய பலம் சேர்த்துள்ளது.சாய் அபியங்கரின் இசை நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு படத்திற்கு இளமையான உணர்வை அளிக்கிறது.பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்திலும் தன்னுடைய தனித்துவமான பாணியில் நடித்திருக்கிறார். இளம் தலைமுறையினருக்குப் படம் பிடிக்கும் .
.
Tags :


















