முதல்வர் இன்று குமரி வருகை 1500 போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

by Editor / 06-03-2023 07:30:09am
முதல்வர் இன்று குமரி வருகை 1500 போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் நாக ராஜா கோவில் திடலில் தோள் சீலை போராட்டம் 200-வது மாநாடு நிறைவிழா பொதுக்கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின், கேரளா முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அமைச்சர் மனோ தங்கராஜ், பால பிரஜாபதி அடிகளார், எம். பி.விஜய் வசந்த்  , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
மேலும் நாகராஜா திடலில் பொதுமக்கள் அமர வசதியாக இருக்கைகள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 2 மாநில முதல்-அமைச்சர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதையடுத்து நாகராஜா திடல் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 
பொதுக் கூட்டம் முடிந்த பிறகு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் தாங்குகிறார். நாளை (7-ந் தேதி) காலை நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து ஒழுகின சேரியில் உள்ள தி. மு. க. அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைக்கும்அவர் அங்கு தி. மு. க. கொடி கம்பத்தில் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் செல்கிறார்.

முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகையை யடுத்து மாவட்டம் முழு வதும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. திருநெல்வேலி,தென்காசி,தூத்துக்குடி,உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவரை வரவேற்கும் வகையில் சாலைகளில் கொடி தோரணங்கள் பிளக்ஸ் போர்டுகள் அமைக்கும் பணியில் தி. மு. க. வினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் முதல்-அமைச்சரை வரவேற்று சுவர் விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via