கருப்பு சட்டையுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வருகை

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டத்தை அணிந்து வருகை தந்தனர். மேலும், பதாகை ஏந்தி பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கண்டனத்தை பதிவு செய்தனர். பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவியை ராகுல்காந்தி இழந்தார். மத்திய அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல் டெல்லியிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து சென்றுள்ளனர்.
Tags :