தனியார் நிதிநிறுவனத்தின் தொல்லையால் ஒருவர் வீடியோ வெளியீட்டு தற்கொலை.

by Editor / 09-11-2024 10:24:28am
 தனியார் நிதிநிறுவனத்தின் தொல்லையால் ஒருவர் வீடியோ வெளியீட்டு தற்கொலை.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ் வயது 53 இவருக்கு திருமணமாகி ஜெயாமேரி எனும் மனைவியும் மகன் ஒருவரும் உள்ளனர்.  சகாயராஜ் தீவிர இசையமைப்பாளர்  இளையராஜா ரசிகராக இருந்து வந்ததால் கச்சேரிகள் திருமண விழாக்களில் மேடை பாடகராக இருந்து வந்துள்ளார் கடந்த 2011 ஆம் ஆண்டு ஸ்ரீராம் எனும் தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் புதிதாக கார் வாங்கியுள்ளார். அதற்கு அடுத்த ஆண்டு நிதி நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய பணத்தை செலுத்த முடியாததால் காரை நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் எடுத்துச் சென்றதாகவும் அதன் பின்பும் கடந்த எட்டு ஆண்டுகளாக தனக்கு வெறும் 30 ஆயிரத்திற்கு நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் தற்பொழுது எனது சொத்துக்களை முடக்குவதற்கு அந்த தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக இருந்து வருபவரும் ஊழியர் திருப்பதி என்பவரும் சேர்ந்து திட்டம் தீட்டி வருவதாகவும் தான் 90% மாற்றுத்திறனாளியாக உள்ள நிலையில் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனவே நீதித்துறை மற்றும் போலீசார் எனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டும் கடிதம் ஒன்றை எழுதியும் வைத்து வீட்டிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் நேரில் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் விசாரணையை மேற்கொள்ள உள்ளனர் .

 

Tags : தனியார் நிதிநிறுவனத்தின் தொல்லையால் ஒருவர் வீடியோ வெளியீட்டு தற்கொலை.

Share via