மூத்த நடிகரும், முன்னாள் எம்.பி.யும் இன்னசென்ட் காலமானார்

by Staff / 27-03-2023 12:52:58pm
மூத்த நடிகரும், முன்னாள் எம்.பி.யும் இன்னசென்ட் காலமானார்

 பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் (75) காலமானார். சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 3ஆம் தேதி கொச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு 10.30 மணியளவில் உயிரிழந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளராக சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான திரைப்படங்களில், காமெடி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர், தமிழில் 'லேசா லேசா' படத்திலும் நடித்துள்ளார்.

 

Tags :

Share via