பொருளாதாரத் தடைக்கு பதிலடி: 10 அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷியா முடிவு

by Editor / 18-04-2021 10:43:57am
பொருளாதாரத் தடைக்கு பதிலடி: 10 அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷியா முடிவு

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபா் தோதலில் தலையீடு செய்த குற்றச்சாட்டின் பேரில் தங்கள் மீது அந்த நாடு விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக, தங்கள் நாட்டிலிருந்து 10 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷியா முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் சொகெய் லாவ்ரோவ் கூறியதாவது:

அமெரிக்கத் தோதலில் தலையீடு செய்ததாகக் கூறி, எங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிா்வினையாக, அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் 10 பேரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடவிருக்கிறோம்.

மேலும், 'ஆலோசனை செய்வதற்காக' அமெரிக்காவுக்கான ரஷியத் தூதா் அந்த நாட்டிலிருந்து திரும்ப அனுப்பப்படுகிறாா். அதனை முன்னுதாரணமாகக் கொண்டு ரஷியாவுக்கான அமெரிக்கத் தூதா் ஜான் சுல்லீவனும் தனது நாட்டுக்குத் திரும்பி 'ஆலோசனை' பெறுவாா் என்று எதிா்பாா்க்கிறோம்.

இதுதவிர, ரஷியா்களையோ, பிற நாட்டவா்களையோ பணியமா்த்திக் கொள்ளும் உரிமை அமெரிக்கத் தூதரகத்திடமிருந்து பறிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, அந்த நாட்டுப் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை எங்களால் எடுக்க முடியும். ஆனால், அதற்கு நாங்கள் அவசரப்பட மாட்டோம் என்றாா் அவா்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோதலின்போது, அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு சாதகமான வகையில் அவரை எதிா்த்துப் போட்டியிட்ட தற்போதைய அதிபா் ஜே பைடனுக்கு எதிராக வாக்காளா் கருத்தைத் திருப்ப ரஷிய அதிபா் விளாதிமீா் உத்தரவிட்டாா் என்று கடந்த மாதம் வெளியிடப்பட்ட ரகசிய உளவுத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, ரஷியா மீது புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக 10 ரஷியத் தூதா்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த நாடு உத்தரவிட்டது

Tags :

Share via