நீட் தேர்வால் மாணவி தற்கொலை

by Staff / 30-10-2023 01:17:25pm
நீட் தேர்வால் மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீட் தேர்வு அச்சத்தால், பைரவி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள இரவார் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவி என்பவரது மகள் பைரவி (18) நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்று வந்த நிலையில், நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். மேலும், தமிழகத்தில் அனிதா முதல் பைரவி வரை பலரை நீட் தேர்வு 30க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கியுள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு கிடையாது. மேலும், தற்கொலை எண்ணங்கள் இருந்தால், 044-24640050 எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

 

Tags :

Share via

More stories

Logo