14 ஆண்டுகளுக்குப் பிறகு தீப்பெட்டி விலை அதிகரித்தது

by Editor / 23-10-2021 08:27:14pm
14 ஆண்டுகளுக்குப் பிறகு தீப்பெட்டி விலை அதிகரித்தது

14 ஆண்டுகளுக்குப் பிறகு, தீப்பெட்டியின் விலை உயர உள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதால், மூலப்பொருட்களின் விலை உயர்வதே இதற்கு காரணம். வரவிருக்கும் இந்த விலை திருத்தத்திற்குப் பிறகு, தீப்பெட்டிகளின் சில்லறை விலை, டிசம்பர் 1, 2021 முதல் தற்போதைய விலையான 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக இரட்டிப்பாகும்.

இதற்கு முன்னர், 2007 ல் தீப்பெட்டியின் விலை, ஒரு பெட்டிக்கு 50 பைசாவில் இருந்து ரூ .1 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த விலையை ரூ. 2 ஆக உயர்த்துவதற்கான முடிவை அனைத்து தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களும் சேர்ந்து எடுத்துள்ளன.

14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டிகளின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய தீப்பெட்டிகள் சம்மேளனம் (All India Chamber of Matches ) அறிவித்துள்ளது. அதிகரிக்கும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கூற்றுப்படி, தீப்பெட்டி தயாரிக்க 14 வகையான மூலப்பொருட்கள் தேவைப்படுகின்றன. கடந்த 14 ஆண்டுகளில் இவற்றில் பல பொருட்களின் விலைகள் இருமடங்கு அதிகமாகி, தீப்பெட்டி உற்பத்தியின் செலவுகள் (Price Rise) அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

 

Tags :

Share via