ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுவனை கத்தியால் குத்திய தலைமை காவலர் கைது.

ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சிவனேசன். இவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு விட சென்ற போது வேகமாக பைக்கில் குறுக்கே வந்த சிறுவனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே சிறுவன் அர்ஜூனனை கையில் வைத்திருந்த பாக்கெட் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்தார்.இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி போலீசார் தலைமை காவலர் சிவனேசனை கைது செய்தனர்.
Tags : ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுவனை கத்தியால் குத்திய தலைமை காவலர் கைது.