ரஷ்யா தான் காரணமா உக்ரைன் அதிபர் விரக்தியுடன் கேள்வி

by Staff / 27-03-2022 12:49:35pm
ரஷ்யா தான் காரணமா உக்ரைன் அதிபர் விரக்தியுடன் கேள்வி

 
ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. ஐரோப்பிய நாட்டு நாடாளுமன்றங்களில் காணொலி வாயிலாக உரையாற்றி ஜெலன்ஸ்கி ஆதரவு திரட்டி வருகிறார்.

ஆனால் எம்.பி.க்கள் எழுந்து நின்று கைதட்டுவது தவிர்த்து வேறு ஆக்கப்பூர்வமான உதவிகளை அந்த நாடுகள் இதுவரை செய்ததாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக உக்ரைனை அறிவிக்கக் கோரியதும் ஏற்கப்படவில்லை.

அதேநேரத்தில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து தலைநகர் கீவிலும் குண்டுகள் விழத் தொடங்கியுள்ளன.
 
இந்தநிலையில் காணொலி வாயிலாக உரையாற்றிய ஜெலன்ஸ்கி,  ராணுவ உதவி கேட்டு பல நாட்கள் காத்திருப்பதாக வேதனையுடன் குறிப்பிட்டார்.

கவச வாகனங்கள் போன்ற சிறிய ரக ஆயுதங்களை வழங்குவதாக சில நாடுகள் கூறியிருப்பதாகவும், அதனால் தூசிகள்தான் எழுவதாக விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பீரங்கிகள்,  விமானம் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்தான் உக்ரைனுக்குத் தேவை என்றும் கூறியுள்ளார். ஆயுதம் கேட்பது உக்ரைனின் சுதந்திரத்திற்காக மட்டுமல்ல, ஐரோப்பாவின் சுதந்திரத்திற்காகவும்தான் என்பதை உணர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

நேட்டோவின் போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகளில் தலா 1 சதவீதம்தான் கேட்பதாக குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, அதை தருவதற்கு தடையாக இருப்பது ரஷ்யா மீதான பயம்தான் காரணமா என்றும் கேட்டுள்ளார்.

 

Tags :

Share via