திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

by Editor / 26-11-2023 09:03:15pm
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் மாலை 6.00 மணிக்கு ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பின்னர் 7அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் மின்விளக்கு ஒளியில் ஜொலிக்கிறது. 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

Tags : திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Share via

More stories