தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வரும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஷிப்ட் முறையில் இயங்கும் இந்த தொழிற்சாலையில் ஒரு ஷிப்டின் பொழுது சுமார் 5000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதையடுத்து ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். தொழிற்சாலையில் உள்ள பல மூலப்பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்தில் கோடிக்கணக்கில் பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags :