தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு.

பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் மீண்டும் ஒரு புதிய காற்று சுழற்சி உருவாகிறது. இந்த காற்றின் சுழற்சி மார்ச் 11-ஆம் தேதியை ஒட்டிய நாட்களில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள கன்னியாகுமரி கடலை நோக்கி நகரக்கூடும். விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையில் மிக கனமழையும் பெய்யும். தென் மாவட்டங்களில் ஏற்கனவே அணைகள் நிரம்பியுள்ளதால் மார்ச் 11ம் தேதிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும்.
Tags : தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு