மின்கட்டணம் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில்பாலாஜி

மின் கட்டண உயர்வு குறித்து கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் 100 யூனிட்டிற்குள்ளாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு கோடி பேர் வரை உள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 63 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 27 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஒருநாளைக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டண உயர்வாகும் என்றார்.
Tags :