இளைஞர் வெட்டி கொலை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கூலிப்பட்டியில் இரவில் உறங்கிய 27 வயதுடைய இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.சடலத்தை கைப்பற்றிய கீழவளவு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் நண்பர்களுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் மேலூர் டிஎஸ்பி ஆர்லியஸ் ரிப்போனி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :