ஒட்டுமொத்த கேரள மாநிலத்தையும் புனலூரை நோக்கி திரும்பிபார்க்கவைத்த நகர்மன்ற உறுப்பினர்.

கேரள மாநிலம் புனலூர் யூ டி எப் நாடாளுமன்ற கட்சியினுடைய பொறுப்பாளரும், புனலூர் நகர மன்றத்தின் உடைய கவுன்சிலரு மாக இருக்கும் ஜி.ஜெயப்பிரகாஷ் தனது வார்டிலுள்ள 485 குடும்பங்களைச் சார்ந்த ஐந்து வயது முதல் 70 வயது வரை உள்ள 1382 நபர்களுக்கு இலவசமாக அவர்களுக்கு இன்சுரன்ஸ் திட்டத்தின் கீழ் கொண்டுவந்துள்ளார். அதன்படி அனைத்து நபர்களும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ளனர். இத்திட்டத்தின் படி அந்த வார்டில் உள்ளவர்கள் விபத்தில் மரணம் அடைந்தவர்களை சார்ந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும், விபத்தில் காயம் அடைப்பவர்களுக்கு ஊனத்தின் தன்மையை பொறுத்து அதிகபட்சமாக ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் வகையில் இந்த காப்பீடு கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இத்திட்டத்தினை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிமியமானது சில பொதுநலவாதிகளிடமிருந்தும் சில பள்ளிகளிடமிருந்தும் உதவிகள் பெறப்பட்டு அதன் மூலம் ரூபாய் 13 கோடியே 82 லட்ச ரூபாய்க்கு அந்த வார்டு முழுவதும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது, இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு நகர்மன்ற உறுப்பினர் தனது வார்டிலுள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி தல ஒரு லட்ச ரூபாய் காப்பீடு செய்த செயல் கேரள மாநிலத்தில் அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் கேரள மாநிலத்தில் புனலூர் நகர்மன்ற உறுப்பினர் ஜெயபிரகாசின் திட்டமானது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இன்றைய நிலவரப்படு ஒட்டுமொத்த மாநிலமும் புனலூரை பற்றித்தான் பேசுகிறது.
Tags :