சிறையில் இருந்து கோச்சார் தம்பதி விடுவிப்பு
வீடியோகான் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். வீடியோகான் நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக கடன் வழங்கியது தொடர்பாக சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சாரை சிபிஐ கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கைது செய்தது. கைது செய்யப்பட்டதை எதிர்த்து கோச்சார் தம்பதியினர் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர், அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி விடுவித்தது.
Tags :