லாரி மோதி முதியவர் பலி

by Staff / 10-01-2023 01:06:46pm
லாரி மோதி முதியவர் பலி

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்த காவாளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 80) விவசாயி. இவர் சம்பவத்தன்று திருவோணம் கடைத்தெருவிற்கு சென்று விட்டு சைக்கிளில் வீட்டுக்கு திருப்பிக் கொண்டு இருந்தார். அப்போது சாலையின் குறுக்கே கடந்து செல்வதற்காக சைக்கிளை நிறுத்தி கையில் பிடித்தவாறு சாலையில் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கட்டை அருகே நின்று கொண்டு இருந்தார். இந்த வேளையில் அதே சாலையில் வந்த ஒரு லாரி சொக்கலிங்கம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சொக்கலிங்கத்தை அக்கம் பக்கத்துடன் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சொக்கலிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மகன் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் திருவோணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo