போலி விமான டிக்கேட் மூலம் விமான நிலையத்திற்குள் நுழைந்த நபர் கைது

by Editor / 20-06-2022 02:04:51pm
போலி விமான டிக்கேட் மூலம் விமான நிலையத்திற்குள் நுழைந்த நபர் கைது

விருதுநகரை சேர்ந்த மென்பொறியாளர் சசிகுமார் கனடா நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். இந்நிலையில் சென்னை விமானநிலையத்திற்கு வந்த அவர் துபாய் செல்வதற்கான விமான டிக்கேட்டை காட்டி, விமானநிலையத்தின் உள்பகுதிக்குள் நுழைந்தாா். தொடர்ந்து புறப்பாடு பகுதி வழியாக வெளியே செல்ல முயன்ற அவரை பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர் நிறுத்தி விசாரித்தார்.அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த அதிகாரி அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் மனைவியை வழியனுப்ப வந்ததும், சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லாததால் போலி விமான டிக்கேட் தயாரித்து பயணி போல் நடித்து விமானநிலையத்திற்குள் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்தனர். 
 

 

Tags :

Share via

More stories

Logo