வேண்டுதலுக்காக நாக்கை அறுத்து கொண்ட பக்தர்.

by Editor / 11-09-2022 08:35:48am
வேண்டுதலுக்காக நாக்கை அறுத்து கொண்ட பக்தர்.

உத்தரப் பிரதேச மாநிலம் புரப் சாரா கிராமத்தைச் சேர்ந்த சம்பத் (40) என்பவர் நேற்று இவர் வழக்கம் போல் கோயிலுக்குச் சென்றுள்ளார். பிறகு கங்கை நதியில் குளித்த சம்பத் தனது மனைவியைத் தன் காலில் விழுந்து கும்பிடும்படிக் கூறியுள்ளார். அவர் காலில் விழுந்ததவுடன் தன்னிடமிருந்த பிளேடை எடுத்து தனது நாக்கை அறுத்துக்கொண்டார் எனஉடன்  இருந்த இவரது மனைவி தெரிவித்துள்ளார்.நாக்கை அறுத்து கொள்வதாக ஆலயத்திலுள்ள தெய்வத்திற்கு வேண்டுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் விவேக் கேசர்வானி கூறுகையில், “சம்பத்தின் நாக்கு முழுதாகத் துண்டிக்கப்படவில்லை. அதை மீண்டும் தைத்துச் சரிசெய்யலாம்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories