இந்திய போர் வீரர்களை நினைவுகூர்வதில் இனப்பாகுபாடு

by Editor / 23-04-2021 11:07:31am
இந்திய போர் வீரர்களை நினைவுகூர்வதில் இனப்பாகுபாடு

முதல் உலகப்போரின் போது (1914-1918) பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த, தற்போதைய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இந்தியாவிலிருந்து 14 லட்சம் வீரர்கள் போருக்கு அனுப்பப்பட்டனர். இதில் 50,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் போரில் வீரமரணமடைந்தனா்.
இச்சூழலில், முதல் உலகப் போரில் உயிரிழந்த இந்திய வீரா்கள் மற்ற நாட்டு வீரர்களுக்கு இணையாக நினைவுகூரப்படுவதில்லை என்று வரலாற்று எழுத்தாளர் ஷ்ராவணி பாசுவின் 'For King and Another Country: Indian Soldiers on the Western Front, 1914-18' என்ற வரலாற்று நூல் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. அதனைத் தொடா்ந்து, முதல் உலகப் போரில் உயிரிழந்தவர்களில் விடுபட்டவர்களின் பெயா்களும் நினைவுகூரப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததைத் தொடா்ந்து, இதுதொடா்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2019-ஆம் ஆண்டு சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தனது அறிக்கையை வியாழக்கிழமை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் 'முதல் உலகப்போரில் உயிரிழந்த இந்தியா, கிழக்கு - மேற்கு ஆப்பரிக்க நாடுகள், எகிப்து மற்றும் சோமாலியாவைச் சோந்த 45,000 முதல் 50,000 வீரர்கள், முதல் உலகப் போரில் உயிரிழந்த மற்ற வீரர்களைப் போல நினைவுகூரப்படுவதில்லை. இனப்பாகுபாட்டை காட்டியிருப்பதையே இது காட்டுகிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென் வாலஸ் அவையில் மன்னிப்பு கோரினார். அப்போது பென் வாலஸ் கூறுகையில், ''வீரா்கள் நினைவுகூரப்படுவதில் பாரபட்சம் காட்டியிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. எனவே பிரிட்டன் அரசு சாா்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று அவர் கூறினார்.

Tags :

Share via