தவறே செய்யாமல் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டேன்- அன்புமணி

by Editor / 16-06-2025 02:48:52pm
தவறே செய்யாமல் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டேன்- அன்புமணி

நான் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் எனது அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். காஞ்சியில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி, "பாமகவில் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். சில நாட்களில் அவர்கள் யார் என்பது ராமதாஸிற்கு தெரியவரும். என் பின்னால் கோடான கோடி தொண்டர்கள் உள்ளனர். அமைதியாக இருப்பது எனது பலம். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் துணிச்சல், திட்டம் என்னிடம் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via