கராத்தே பயிற்சி தருவதாக மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்

by Staff / 02-04-2024 12:04:41pm
கராத்தே பயிற்சி தருவதாக மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்

அரியலூர்: ஜெயங்கொண்டம் அண்ணாநகரை சேர்ந்த கர்ணன் (36) என்பவர் இரவாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 8 முதல் 10ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளிளுக்கு கராத்தே பயிற்சி தருவதாக கூறி பாலியல் அத்துமீறயில் ஈடுபட்டுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆசிரியரின் தொந்தரவு தாங்க முடியாமலும், வெளியில் சொல்ல முடியாமலும் தவித்து வந்தனர்.இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் ஹெல்ப்லைனுக்கு தொடர்பு கொண்டு புகாரளித்தார். இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பள்ளியில் விசாரணை நடத்தி, கடந்த 24ஆம் தேதி ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் செந்துறை பிரிவு சாலையில் தலைமறைவாக இருந்த கர்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories