வளைகாப்பு விழாவில் பரிமாறப்பட்ட பிரியாணியை சாப்பிட்டவர் பலி

திருவாரூர் மாவட்டம், திருவாசல் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது மனைவி மாரியம்மாள். 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்,இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியைத் தனது இல்லத்திலேயே விக்னேஷ் நடத்தியுள்ளார். இந்த வளைகாப்பு நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தக்காளி, தயிர், புளி, கருவேப்பிலை, லெமன் என பலவகையான சாதம் பரிமாறப்பட்ட நிலையில் ஆர்டர் செய்து பிரியாணியும் பரிமாறப்பட்டுள்ளது. இந்த உணவைச் சாப்பிட்ட மாரியம்மாள் உட்பட 8 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் அருகே இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த வேலங்குடி பகுதியைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :