சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அதிரடி

முக்கிய ஆவணமான ஆதாருடன் மொபைல் எண், வங்கி கணக்கு எண், பிஎப் எண், பான் கார்டு எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அண்மையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன் மூலம் இரட்டை பெயர் பதிவு, போலி வாக்கு பதிவு போன்றவைகளை தடுக்க முடியும் என்று தெரிவித்தது. அந்த வரிசையில் தற்போது ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போலி ஓட்டுநர் உரிமங்களை பெற்று மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags :