விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்

by Staff / 13-03-2024 12:48:14pm
விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 கல்லூரி மாணவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிறுநாகலூர் கிராமம், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுப்பேடுவிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் தனுஷ் ( 21), கமலேஷ் (19) மற்றும் மோனிஷ் (19) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிழிந்தனர்.மேலும், இவ்விபத்தில் ரவிச்சந்திரன் (20) என்பவர் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

 

Tags :

Share via

More stories