மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன்

ஆந்திர மாநிலம், விஜயநகர மாவட்டத்தில் கவுரம்மா (40) என்ற பெண்ணை அவரது கணவர் சத்யம் தொண்டையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இன்று காலை பனை மரத் தோட்டத்தில் கவுரம்மா வேலைக்குச் சென்றபோது கணவன் - மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சத்யம், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தனது மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் கவுரம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags :