4 மாநிலங்களில் புதிய பாஜக தலைவர்கள் நியமனம்

by Staff / 04-07-2023 05:04:50pm
4 மாநிலங்களில் புதிய பாஜக தலைவர்கள் நியமனம் ஜார்கண்ட், பஞ்சாப், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை பாஜக நியமித்துள்ளது. மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தெலங்கானா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநில பாஜக தலைவராக புரந்தேஸ்வரியை நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.
 

Tags :

Share via