by Staff /
04-07-2023
04:57:20pm
2020ஆம் ஆண்டு சென்னை மாட்டான்குப்பம் பகுதியில் கஞ்சா வழக்கில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிலோ அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பறிமுதல் செய்யப்பட்ட 20 கிலோ கஞ்சாவில், 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி, காவல்துறையினரால் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என கூறி கஞ்சா வியாபாரிகள் இரண்டு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினர்.
Tags :
Share via