உக்ரைனுக்கு கூடுதலாக போர் விமானங்களை அனுப்புமாறு ஜோ பைடனிடம் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

by Admin / 06-03-2022 02:13:20pm
உக்ரைனுக்கு கூடுதலாக போர் விமானங்களை அனுப்புமாறு ஜோ பைடனிடம் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைனுக்கு கூடுதலாக போர் விமானங்களை அனுப்புமாறு அமெரிக்காவிடம் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா 11வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது உக்ரைனுக்கு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உதவிகளை செய்யுமாறு ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு ஜோபைடனிடம்  ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார் .


இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக ஜெலன்ஸ்கி உடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உங்களுக்கு தேவையான பாதுகாப்பு மனிதநேயம் மற்றும் பொருளாதார உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

எனக்கு கூடுதலாக போர் விமானங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டு ஜெலன்ஸ்கி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி நிறுத்துமாறு வலியுறுத்தினார்
 

 

Tags :

Share via