கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து?

by Editor / 29-07-2025 01:07:44pm
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து?

கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டை ரத்து செய்யப்பட்டதாக பரவும் செய்திக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஏமனில் வேலைக்கு சென்ற பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா (38) கடந்த 2017-ல் கொலை வழக்கில் கைதான நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில் அவரது மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்திய கிராண்ட் முப்தி அபூபக்கர் முஸ்லியாரின் அலுவலகம் நேற்று கூறியிருந்தது.

 

Tags :

Share via