பெட்ரோல் குண்டு விவகாரம் பாஜகவினருக்கு தொடர்பு: அப்பாவு

by Staff / 27-10-2023 04:57:33pm
பெட்ரோல் குண்டு விவகாரம் பாஜகவினருக்கு தொடர்பு: அப்பாவு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டி இருந்தது. இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பாஜகவினருக்கு தொடர்பு இருக்கலாம் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் இதுவரை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களை வைத்து பார்க்கும் போது இந்த சம்பவத்தில் பாஜகவினருக்கு தொடர்பு இருக்கலாம் என தோன்றுகிறது. இப்படி சம்பவங்கள் நடக்கிறது என்றால் ஒட்டு மொத்தமாக ஒரு குறிப்பிட்ட இயக்கம், ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும்தான் பெட்ரோல் குண்டை வைத்து விளையாடுகின்றனர். பாஜக, இந்து மக்கள் கட்சி திட்டமிட்டு, தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கவும், வன்முறையைத் தூண்டவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo