வியாபாரி கொன்று புதைப்பு தவெக மாவட்ட செயலாளரிடம் போலீசார் விசாரணை.

பெங்களூருவை சேர்ந்தவர்கள் திலீப் (40), கலுவா (35). இவர்கள் தேனியில் அலங்கார பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் திலீப்பை சிலர் காரில் கடத்தி, கொன்று உடலை புறம்போக்கு நிலத்தில் புதைத்தனர். இந்த சம்பவத்தில் 7 பேர் கைதான நிலையில் தேனி தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். ஏனெனில் அவர் தோட்டத்தில் வைத்து தான் திலீப் தாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags : வியாபாரி கொன்று புதைப்பு தவெக மாவட்ட செயலாளரிடம் போலீசார் விசாரணை.