by Staff /
10-07-2023
11:21:22am
செங்கல்பட்டில் பாமக வடக்கு நகர செயலாளர் நாகராஜன் என்பவர் நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளியை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், கட்சியினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்த, இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற அஜய் (23) என்பவர் போலீசாரை கத்தியால் தாக்கியதால், தற்காப்புக்காக அவரது இடது காலில் போலீசார் சுட்டுப் பிடித்தனர். காயமடைந்த அஜய் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags :
Share via