by Staff /
10-07-2023
11:25:25am
ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து சிறையிலடைத்திருப்பது தமிழ்நாட்டு மீனவர்களிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 'சிங்கள ராணுவம் மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்திருப்பதோடு, அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுப்படுத்தி, கட்சத்தீவினை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags :
Share via