விடுதி மாடியிலிருந்து விழுந்த மாணவி பலி

by Staff / 01-04-2023 11:59:04am
 விடுதி மாடியிலிருந்து விழுந்த மாணவி பலி

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட்., 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்ற காலை பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதி மாடியில் நின்று இவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென கீழே விழுந்து மாணவி படுகாயம் அடைந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்கப்பட்ட மாணவி, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories