தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன்

திருச்சி நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த மாரியாயிக்கு முத்தையா(31), கோபி(29) என இரு மகன்கள் உள்ளனர். கோபி கூலி வேலை செய்து வருகிறார். மனநலம் பாதித்தவரான முத்தையா, அவரது தாய் மட்டுமின்றி அருகில் வசிப்போரையும் தாக்குவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த கோபியின் தலையில் இரும்பு கம்பியால் முத்தையா தாக்கியுள்ளார். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் முத்தையாவை போராடி கைதனர்.
Tags :