பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு உட்பட பல மாநில அரசுகளும் தொடர்ந்து கேட்டுவரும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அமைச்சரவையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், “2021ல் நடக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, “மாநில அளவில் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை. மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசின் வரம்பில் தான் வரும். மாநிலங்கள் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் குழப்பம் ஏற்படும்” எனத் தெரிவித்தார்.இந்நிலையில், இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.ஏற்கனவே அம்மாவின் அரசு இருக்கும்பொழுது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
Tags : பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு.