ஒருதலை காதல்... காதலனை பழிவாங்க பெண் விபரீத முடிவு

ஒருதலை காதலனை பழிவாங்குவதற்காக, காதலன் பெயரை பயன்படுத்தி நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னையை சேர்ந்த பெண் ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் கிரிக்கெட் மைதானம், விமான நிலையம், பள்ளிகள் என தொடர்ந்து மிரட்டல் வந்துள்ளது. போலீசார் சோதித்து பார்த்ததில், போலி இ-மெயில் முகவரியை பயன்படுத்தியது தெரியவந்தது. போலி முகவரியை பயன்படுத்தியிருந்தாலும் ஒரே லேப்டாப்பை பயன்படுத்தியதால் அந்த பெண் சிக்கினார். தற்போது அந்த பெண் குஜராத் சிறையில் உள்ளார்.
Tags :