காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்

by Editor / 25-06-2025 01:46:35pm
காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்

சென்னை எம்.கே.பி. நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 17 வயதுடைய 4 சிறுவர்களுக்கு காவல் ஆய்வாளர் நூதன தண்டனை கொடுத்துள்ளார். அவர்கள் நான்கு பேரும் வித்தியாசமாக சிகை (முடி வெட்டுதல்) அலங்காரம் செய்திருந்ததால் கடைக்கு அனுப்பி மொட்டை அடிக்க வைத்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் பென்சாம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via