அன்னபூரணி அரசு அம்மா மீது வழக்கு பதிவு போலீஸார் தீவிர தேடுதல்.

by Editor / 28-12-2021 05:37:14pm
அன்னபூரணி அரசு அம்மா மீது வழக்கு பதிவு போலீஸார் தீவிர தேடுதல்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அன்னபூரணி அரசு அம்மா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். இவர் கடந்த 2014ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது, அந்த நிகழ்ச்சியின் முடிவில் தனது கணவரையும் 14 வயது குழந்தையும் பிரிந்து அரசு என்ற நபருடன் சென்றதாக கூறப்படுகிறது.
இதன்பின்னர் அவர் அரசுடன் ஈரோடு பகுதியில் சென்று வசித்து வந்த போது மர்மமான முறையில் அரசு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அன்னபூரணி தன்னுடைய காதலனான அரசு உருவ சிலையை வடித்து சிலகாலம் வழிபட்டு வந்துள்ளார். 
இதற்கிடையில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் என்ற தொண்டு நிறுவனத்தை அந்த பகுதியில் தொடங்கி அன்னப்பூரணி அரசு அம்மனாக மாற்றிக் கொண்டு ஆதிபராசக்தியின் அவதாரமாக கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
இந்நிலையில் கடந்த  19ம் தேதியும் அன்னபூரணி அரசு அம்மாவின் திவ்ய தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி நடத்தியதாக வழக்கு பதிவு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதற்கான புகாரை வருவாய் துறையினரிடம் பெற்று பரிசீலனையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.அத்துடன் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஈரோடு காவல்துறையினரும் அன்னபூரணி அரசு அம்மாவைத் தேடி வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ வைரலானதை தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தொலைபேசி தொடர்பு எண்களையும் நீக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து போலீசார் அவரைத்தேடி வருகின்றனர்  எனதகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via