டெல்லியில் பயங்கர தீ விபத்து

by Staff / 04-06-2023 04:39:32pm
டெல்லியில் பயங்கர தீ விபத்து

டெல்லி ஜஹாங்கிர்பூர் குடிசைப் பகுதியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேற துவங்கினர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து 12 தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குடிசை பகுதியில் உள்ள குப்பைகள் கிடக்கும் திறந்தவெளியில் தீ பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அருகில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்பட வில்லை.

 

Tags :

Share via

More stories