இன்று சட்டென்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை.
நாட்டில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கம் விலையால் பொதுமக்கள் எப்போது விலை குறையும் என்றே எதிர் பார்த்து வருகின்றனர்.சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் நகையை நினைத்து பார்க்க கூட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.முன்பு எப்போதும் இல்லாத வகையில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை ஏறத்தாழ ஆயிரத்து 200 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் நேற்று செப்டம்பர் 16ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,280க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.அதன் படி, இன்று செப்டம்பர் 17ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,270க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.82,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.8,510க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.68,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags : இன்று சட்டென்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை.














.jpg)




