‘பயிர் கடன் தள்ளுபடி எப்போது?’ - அண்ணாமலை கேள்வி

by Staff / 06-02-2025 02:05:38pm
‘பயிர் கடன் தள்ளுபடி எப்போது?’ - அண்ணாமலை கேள்வி

திமுகவின் கல்வி கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஆட்சிக்கு வந்த உடன், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தேர்தல் அறிக்கையிலும், சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும், இந்த திமுக அரசு, இன்று வரை, பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via