சீமானுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

by Staff / 06-02-2025 02:02:36pm
சீமானுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரானால்தான் சீமானுக்கு நிதானம் வரும் என்று நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளார். கலவரத்தை தூண்டும் விதமாக பேசியது தொடர்பாக பதிவான வழக்கில் தன்னை விடுவிக்கக்கோரிய சீமானின் மனு மீது விசாரணை நடந்தது. பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு திமுக, விசிக, திக உள்ளிட்ட கட்சிகள் எதிர்வினையாற்றி வருகின்றன.

 

Tags :

Share via