இந்தியா அணி அபா ரவெற்றி
இலங்கை கொழும்பு பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இறங்கிய இந்திய அணி ஒரு ரன்னில் ஒரு விக்கெட்டை இழக்க இந்திய ரசிகர்களிடம் பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது. இருப்பினும், சூரிய குமாரின் அதிரடி ஆட்டத்தால் ரன்கள் குவிய தொடங்கின. நூறு ரண்களுக்குப் பிறகு படிப்படியாக டிக்கெட்கள் வீழ்ந்த நிலையில் 175 ரன்கள் 6 விக்கெட் இழப்புக்கு 20 ஓவரும் முடிய... 176 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு பாகிஸ்தான் கலக்கத்தோடு களத்தில் இறங்கி ஒரு ரன் எடுப்பதற்குள்ளே ஒரு விக்கெட்டை இழந்தது .அடுத்தடுத்து 10விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி 114 ரன்களுடன் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது.
Tags :



















