தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை

by Admin / 19-10-2024 03:28:56pm
 தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை

தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. நவம்பர்1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதனால் அந்த நாளை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்தால் நான்கு நாட்கள் விடுமுறையாக சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட செல்பவர்கள் பலன் பெறுவார்கள் என்கிற கருத்து உருவாகி இருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு அமைப்புகள் அரசிடம் வெள்ளிக்கிழமையை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு நவம்பர் ஒன்றாம் தேதி விடுமுறையாக அறிவித்துள்ளது..விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 9 .11. 2024 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via

More stories